ADDED : ஜன 14, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, சி. மெய்யூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்திய அதேபகுதியை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன், 34; மேல்தனியாலம்பட்டு மலட்டாற்றில் இருந்து மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த திருவேங்கட மகன் மாவீரன், 34; ஆகியோரை கைது செய்தனர். இருவரும் மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
லாட்டரி விற்றவர் கைது
பெண்ணைவலம் கிராமத்தில் லாட்டரி சீட்டு விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கூத்தான் மகன் ராஜவேல், 45; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.300 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.