ADDED : ஜூலை 09, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை அருகே லாரியில் மணல் கடத்திய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
காணை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், நேற்று ஆரியூர் கிராமத்தில் ரோந்து சென்றனர். அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்திய டிரைவர் சிறுவாளை கிராமத்தை சேர்ந்த குண்டுமணி மகன் சிலம்பரசன்,35; கிருஷ்ணமூர்த்தி மகன் லட்சுமி நாராயணன்,37; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.