/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்திய இருவர் கைது
/
மதுபாட்டில் கடத்திய இருவர் கைது
ADDED : மே 17, 2025 11:46 PM

வானுார்: புதுச்சேரியில் இருந்து வேலுாருக்கு மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் கிளியனுார் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற பைக்கில் மதுபாட்டில் கடத்தி வந்த இருவரை பிடித்தனர்.
விசாரணையில், வேலுார் மாவட்டம் வரக்கூர் தாலுகா நுறுக்குபாதை கிராமம் அசோக்குமார், 45; அதே பகுதி முருகன் மகன் சிங்கமணி, 25; என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திச்சென்றது சொந்த ஊரில் கூடுதல் விலைக்கு விற்க கொண்டு சென்றது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்தபோலீசார், 147 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.