/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
/
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
ADDED : ஜன 17, 2025 06:30 AM
விழுப்புரம்: திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் வெளிமாநில மதுபானங்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று காலை 10.00 மணிக்கு திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, சோதனை செய்தனர். அவர்கள், பையில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் 19 கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின், போலீசார் விசாரித்ததில், அவர்கள் திண்டிவனம், மாரிசெட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் மகன் செல்வம்,38; முருங்கம்பாக்கத்தை சேர்ந்த காசிராஜன் மகன் அருணகிரி,48; ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, மதுபாட்டில்கள், பைக் மற்றும் இரு மொபைல்களை பறிமுதல் செய்தனர்.