/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
/
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
ADDED : நவ 06, 2025 05:12 AM
வானுார்: பைக்கில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் போலீசார் நேற்று வானுார் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேதராப்பட்டில் இருந்து மயிலம் நோக்கி பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர்.
பின் பையை சோதனை செய்தனர். அதில் அவர்கள், 150 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திசென்றது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் வேலன், 31; காஞ்சிபுரம் அடுத்த மதுராந்தகம் வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் சத்தியமூர்த்தி, 38; என்பதும், உறவினரின் விசேஷத்திற்கு நண்பர்களுக்கு விருந்தளிக்க மது பாட்டில்கள் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 150 புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

