/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புள்ளியியல் நிறுவனத்தை முடக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும்: ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தல்

ADDED : நவ 06, 2025 05:12 AM
விழுப்புரம்: இந்திய புள்ளியியல் நிறுவனத்தை முடக்கும் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, ரவிக்குமார் எம்.பி., அறிக்கை: ஐ.எஸ்.ஐ., என சுருக்கமாக அறியப்படும், இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதை அரசாங்கப் பிரதிநிதிகள் கொண்ட அமைப்பாக மாற்ற, மத்திய அரசு புதிய சட்ட மசோதாவை வெளியிட்டுள்ளது.
அதை திரும்பப் பெற வலியுறுத்தி, புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்.அந்த நிறுவனத்தின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை முடக்குவதாகவும், அதனுடைய தன்னாட்சி தன்மையைக் கெடுப்பதாகவும், இந்த மசோதா இருக்கிறது. தற்போது, அதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. அதையும் மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது.
ஐ.எஸ்.ஐ., நிறுவனத்துக்கு, இனிமேல் மத்திய அரசு நிதி ஒதுக்குவதற்கு பதிலாக, மாணவர்கள் கல்விக் கட்டணத்திலிருந்து நிதியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று, மசோதாவில் கூறியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் ஆய்வு நோக்கம் பாழ்படுத்தப்பட்டு, அது வணிக மயமாக்கப்படும். எனவே, இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.