/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரியில் இருந்து மது கடத்திய இருவர் கைது
/
புதுச்சேரியில் இருந்து மது கடத்திய இருவர் கைது
ADDED : ஜன 19, 2025 06:48 AM

வானூர்: புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கிளியனூர் போலீசார் நேற்று இரவு 7;00 மணிக்கு, நல்லாவூர் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து நல்லாவூர் மார்க்கமாக வேகமாக வந்த போர்டு பிகோ காரை மடக்கி சோதனை செய்ததில், காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் காரில் வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் அருண்குமார், 28; திருவண்ணாமலை மாவட்டம் மேலன்டபேட்டை ஆராசூரை சேர்ந்த பெருமாள் மகன் சதீஷ், 26; என்பதும், தனது நண்பரின் திருமணத்திற்காக புதுச்சேரியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மது பாட்டில்கள் கடத்திய அருண்குமுார், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், அவர்கள் கடத்தி வந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 135 குவாட்டர் பாட்டில்கள், 32 பீர் பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.