/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரியில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
/
லாரியில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
ADDED : அக் 10, 2024 04:08 AM
விழுப்புரம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை, சூரப்பட்டு பகுதியில் நேற்று குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியே வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மினி லாரியில், 50 கிலோ எடையுள்ள 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின், லாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள், விழுப்புரத்தை சேர்ந்த ஜாபர்சேட், 31; விக்கிரவாண்டி அருகே சோழகனுாரை சேர்ந்த அங்கப்பன்,44; ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள், சூரப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கடைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. பின், போலீசார் ரேஷன் அரிசி கடத்திய இருவரையும் கைது செய்து, அரிசி மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.