/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் மொபைல்போன் திருடிய இருவர் கைது
/
ரயிலில் மொபைல்போன் திருடிய இருவர் கைது
ADDED : நவ 25, 2025 05:46 AM

விழுப்புரம்: விருதுநகர் இளைஞரிடம், ரயிலில் மொபைல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சியை சேர்ந்த சரவணன் மகன் மோகன், 19; இவர், கடந்த 23ம் தேதி இரவு 11:00 மணிக்கு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து விருதுநகருக்கு செல்ல அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2வது பொது பெட்டியில் பயணம் செய்தார்.
நேற்று நள்ளிரவு 12:40 மணிக்கு, ரயில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தபோது மோகன் வைத்திருந்த 20 ஆயிரம் மதிப்பு மொபைல்போன் திருடுபோனது. இது குறித்து விழுப்புரம் ரயில்வே போலீசில் அவர் புகார் அளித்தார். அப்போது, பழைய டிக்கெட் கவுண்டர் அருகே சந்தேகப்படும்படியாக நி ன்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா காரணாம்பாளையத்தை சேர்ந்த அன்சார் அலி, 32; சென்னை மணலியை சேர்ந்த கார்த்திகேயன், 29; என்பதும், மோகனிடம் மொபைல் போனை திருடியதும் தெரியவந்தது. இருவரையும் விழுப்புரம் ரயில்வே போலீசார் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

