/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிலத்தில் உழவு செய்த தகராறு; 2 பேர் கைது
/
நிலத்தில் உழவு செய்த தகராறு; 2 பேர் கைது
ADDED : அக் 02, 2025 11:02 PM
வானுார்; வானுார் அடுத்த நைனார்பாளயைம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மதியழகன், செந்தமிழ்ச்செல்வன். இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது.
இந்த நிலத்திற்கு வானுார், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், செந்தாமரை குடும்பத்தினரும் உரிமை கோரி வந்துள்ளனர். இதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த நிலத்தை கிருஷ்ணன் மற்றும் செந்தாமரை குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் சேர்ந்து டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்தனர்.
அப்போது மதியழகன், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து செந்தமிழ்ச்செல்வன், 37; கிருஷ்ணன், 42; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.