/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீராணம் ஊராட்சியில் அரசு சிறப்பு திட்ட முகாம்
/
வீராணம் ஊராட்சியில் அரசு சிறப்பு திட்ட முகாம்
ADDED : அக் 03, 2025 02:02 AM

விழுப்புரம்: கண்டமங்கலம் ஒன்றியம், வீராணம் ஊராட்சி சமுதாய கூடத்தில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடந்தது.
விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சண்முகம் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் வாசன் முகாமை துவக்கி ைவத்தார். கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், வடம்பாலம் ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செல்வமணி, ஊராட்சி தலைவர்கள் மாவோ, ரவிச்சந்திரன், நடராஜன், செண்பகம் பார்த்திபன், ஒன்றிய நிர்வாகிகள் மோகன்தாஸ், குமணன், ராமமூர்த்தி, மகேந்திரவர்மன், முருகன், ஆனந்தராஜ், சின்னத்தம்பி, இலக்கிய அணி பிரவின்குமார், இளைஞர் அணி குணாநிதி, கிளைச் செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் பங்கேற்றனர்.