/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் காயம்
/
மயிலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் காயம்
மயிலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் காயம்
மயிலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் காயம்
ADDED : ஜன 04, 2025 05:20 AM

மயிலம்: மயிலம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி காயமடைந்தனர்.
கும்பகோணத்தை சேர்ந்தவர் கணேசன், 65; இவருடைய மனைவி அமுதா, 60; இருவரும் மாருதி வேகன் காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த கார், மயிலம் அடுத்த ஜக்காம் பேட்டை அருகே நேற்று காலை 9:15 மணியளவில் முன்னே சென்ற வாகனத்தை ஓவர்டேக் செய்த போது, காரை ஓட்டி சென்ற கணேசன் திடீரென்று பிரேக் போட்டதால், கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காயம் அடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.