ADDED : அக் 23, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுாரில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் நேற்று வளவனுார் நகர பகுதியில் ரோந்து சென்றனர். பசார் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 38; புதுச்சேரி ஆண்டியார்பாளையம் குமார், 40; ஆகியோர், மூன்று நம்பர் லாட்டரி விற்றது தெரிந்தது.
இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுக்கான ஆவணங்கள் மற்றும் 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.