தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இரு வேறு இடங்களில் இருவர் தற்கொலை

 இரு வேறு இடங்களில் இருவர் தற்கொலை

 இரு வேறு இடங்களில் இருவர் தற்கொலை


ADDED : ஜூலை 02, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்தால் இருவேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்துகொண்டனர்.

விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம்,57; விவசாயி. இவர் தினமும் மதுபானம் அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதால், மனைவி ராஜேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நமச்சிவாயம் நேற்று முன்தினம் தனது நிலத்தில் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

உடன் அவரை மீட்டு விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி, 51; கூலித் தொழிலாளி, குடி பழக்கம் உடையவர். கடந்த மாதம் 26 ம் தேதி வழக்கம் போல வினாயகமூர்த்தி குடித்து விட்டு வீடு திரும்பினார். அவரை கண்டித்து மனைவி மரகதவள்ளி, 44; திட்டினார். இதில் மனமுடைந்த அவர் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us