/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரியிலிருந்து சேலத்திற்கு கஞ்சா கடத்தல் இலங்கை அகதி உட்பட இரண்டு பேர் கைது ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

ADDED : நவ 29, 2024 04:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில், விழுப்புரம் அருகே வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீசார் தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, ஏட்டு தேவேந்திரன், தீன தயாளன் உள்ளிட்ட போலீசார் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த பஸ்சில் வந்த இரண்டு பேரின் பையில், கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை பிடித்து, வளவனுார் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த வடிவேல் மகன் தீபகரன், 36; என்பதும், மற்றொருவர் ராமநாதபுரம் அக்காமடம் சேவியர் தெருவைச் சேர்ந்த அந்தோணிஜெபமாலை மகன் அன்டனிபோரீஸ்எல்சின்,32; என்பதும், தெரியவந்தது.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணையில், புதுச்சேரி யிலிருந்து கஞ்சா பொட்ட லங்களை வாங்கிக்கொண்டு, சேலத்திற்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, இரண்டு பேரையும் வளவனுார் போலீசார் கைது செய்து, விழுப்புரம் கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து, 1 கிலோ கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த செந்துாரான், 36; என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.