/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம் இருவர் சிக்கியதால் பரபரப்பு
/
ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம் இருவர் சிக்கியதால் பரபரப்பு
ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம் இருவர் சிக்கியதால் பரபரப்பு
ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம் இருவர் சிக்கியதால் பரபரப்பு
ADDED : டிச 03, 2024 06:53 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மலட்டாற்றில் இருவர் மரத்தின் மீது சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவெண்ணெய்நல்லுார், மலட்டாறு அருகே தீயணைப்பு நிலையம் உள்ளது. இங்கு, நேற்று காலை இரண்டு பேர், சொந்த பணியின் காரணமாக சென்றனர். அப்போது திடீரென மலட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வந்ததால், அந்த இருவரும் அங்கிருந்த மரத்தின் மீது ஏறினர்.
பின், அங்குள்ள மேம்பாலம் மீது வந்து வெள்ள நீரை பார்த்த மக்களிடம், மரத்தில் இருந்த இருவரும், அவர்கள் இருப்பதை தெரியப்படுத்த தெர்மல் கோலை காட்டியுள்ளனர்.
பின், அவர்கள் இருப்பதை அறிந்த சிலர், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பேரில், மதியம் 2.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த சிலர், அவர்களை மீட்க முயன்று, தண்ணீர் அதிகமாக ஆற்றில் சென்றதால் முடியாமல் திரும்பினர்.
தொடர்ந்து, கோவை, சூளூர் பகுதியில் உள்ள இந்திய விமான படையை தொடர்பு கொண்டு மீட்பு பணிக்காக ெஹலிகாப்டரை அனுகியுள்ளனர். இதன் பேரில், விமானம் தரையிரங்குவதற்காக நேற்றிரவு 8.15 மணியில் இருந்து கிராம மக்கள் தீப்பந்தம் பிடித்து கொண்டு சிக்னல் காட்டியபடி நின்றனர்.
9.15 மணிக்கு வந்த ெஹலிகாப்டர் தரையிறங்குவதற்கு சிக்னல் கிடைக்காததால் அரை மணி நேரமாக மேலேயே சுற்றி கொண்டிருந்தது. பின் கிழிறங்காமல் புறப்பட்டு சென்றது. இதையடுத்து, திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு வீரர்கள், வெளிமாவட்டத்தில் இருந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீர்கள், மரத்தில் சிக்கிய இருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
9 மணி நேரமாக மரத்தில் உதவிக்காக காத்திருந்த இருவர் சிக்கிய சம்பவம் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.