/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகா காளேஸ்வரர் கோவிலில் எரியாத ைஹமாஸ் விளக்கு
/
மகா காளேஸ்வரர் கோவிலில் எரியாத ைஹமாஸ் விளக்கு
ADDED : ஜன 20, 2024 05:52 AM
வானுார் : இரும்பை மகா காளேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ைஹமாஸ் மற்றும் மின் விளக்குகள் பழுதாகி எரியாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், இரும்பை கிராமம் சந்திப்பில் பிரசித்தி பெற்ற மகா காளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தினமும், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக பிரதோஷம், சிவராத்திரி போன்ற பல்வேறு விசேஷ தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். மேலும், இக்கோவில் வளாகத்தில் சுப முகூர்த்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்களின் வசதிக்காக ைஹமாஸ் விளக்கு மற்றும் மெர்குரி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் பல மாதங்களாக இந்த மின் விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து இருப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். மின்விளக்குளை சீரமைக்கக்கோரி பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.