ADDED : நவ 18, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த கோலியனுார் கூட்ரோடு அருகே ஒரு ஓட்டலின் முன்பு, உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி காலை 70 வயது முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
பொது மக்கள் தகவலின் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே முதியவர் இறந்த விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து, வி.ஏ.ஓ., ரமேஷ் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

