ADDED : ஜன 09, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டினத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலைய பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் 70 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
திண்டிவனம் போலீசார் அந்த மூதாட்டியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துகல்லுாரி மருத்துவனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.