
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி, : கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஏ.என்.எம்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
தாளாளர் ரங்கபூபதி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்களை வழங்கி புதிய கல்லுாரி பஸ்சை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மாலதி வரவேற்றார். பேராசிரியர்கள் தனலட்சுமி, வினிதா, மீரா, பிரகதீஸ்வரி, கிரிஜா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.