/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க.,வில் பா.ம.க.,வினர் ஐக்கியம்
/
தி.மு.க.,வில் பா.ம.க.,வினர் ஐக்கியம்
ADDED : அக் 06, 2025 02:03 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம் சட்டசபை தொகுதியை சேர்ந்த பா.ம.க., நிர்வாகிகள் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,விற்கு உட்பட்ட கண்டமங்கலம் வடக்கு ஒன்றியம், மாத்துார், நகரியை சேர்ந்த பா.ம.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஞானவேல் தலைமையிலும், கண்டமங்கலம் மேற்கு ஒன்றியம், நரசிங்கபுரத்தை சேர்ந்த பா.ம.க., வினர் விஷ்வா தலைமையில் மொத்தம் 50 பேர் அகட்சியில் இருந்து விலகி , தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர் விஜயசங்கர், கிளை செயலாளர் குப்புசாமி, பிரதிநிதி குமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.