ADDED : நவ 01, 2025 11:28 PM

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில் அவலுார்பேட்டையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் ஒன்றிய சாதாரண கூட்டம் நடந்தது. சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டிஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், பெருமாள், ஷாகின் அர்ஷத், அதிகாரிகள் பங்கேற்றனர்.

