/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருட சேவையில் அருள்பாதித்த வைகுண்டவாச பெருமாள்
/
கருட சேவையில் அருள்பாதித்த வைகுண்டவாச பெருமாள்
ADDED : நவ 02, 2025 11:43 PM

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவத்தை முன்னிட்டு, கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பவித்ரம் பிரதிஷ்டை ஹோமம் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. இரவு 7:00 மணிக்கு வைகுண்டவாச பெருமாள் கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி சன்னதி புறப்பாடும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

