ADDED : ஆக 10, 2025 11:44 PM

திண்டிவனம் : திண்டிவனத்தில் நம்மாழ்வார் சபை சார்பில், 29 ம் ஆண்டு வைணவ இளைஞர் எழுச்சி மாநாடு நடந்தது.
இதையொட்டி, லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் இருந்து, பஜனை குழுவினர் பங்கேற்ற ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மரக்காணம் சாலை, தனியார் திருமண மண்டபத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து நம்மாழ்வார் சபை கவுரவ தலைவர் பாண்டுரங்க ராமானுஜதாசர் கருட கொடியை ஏற்றி வைத்தார். சங்க செயலாளர் ரகுபதி வரவேற்றார். வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
ரகுவீரன் சுவாமிகள் 'திருப்பாவை முற்றோதல்' சொற்பொழிவை நிகழ்த்தினார். இதையடுத்து நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஆஷா நாச்சியார், ஜெயங்கொண்டம் நாதமுனி ராமானுஜம், ஸ்ரீபிள்ளை நரசிம்மப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
'வைணவ வளர்ச்சியில் இளைஞர்களின் எழுச்சி' எனும் தலைப்பில், கும்பகோணம் வெங்கடேஷ்சுவாமிகள் பேசினார். 'யார் வைணவன்' என கருப்பொருளில் சென்னை அனந்த பத்மநாபாச்சாரியர் சிறப்புரையாற்றினார்.
பல்வேறு பகுதிகளிலிருந்து நம்மாழ்வார் சபையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, நல்லியக்கோடன் நகர் நம்மாழ்வார் சபை நிர்வாகிகள் செய்தனர்.