/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வலம்புரி ராஜயோக கணபதி கோவில் கும்பாபிேஷகம்
/
வலம்புரி ராஜயோக கணபதி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 23, 2024 05:27 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் வலம்புரி ராஜயோக கணபதி கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
விக்கிரவாண்டியில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே உள்ள வலம்புரி ராஜயோக கணபதி கோவில் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது.
நேற்று காலை 9:50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி 10:10 மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றியும், கோவிலில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு புனிதநீர் ஊற்றியும் கும்பாபிேஷகம் நடந்தது.
யாகசாலை மற்றும் பூஜைகளை விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் தலைமையில் ராஜா சிவாச்சாரியார் செய்திருந்தார்.
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

