/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளவனுார் பேரூர் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
வளவனுார் பேரூர் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 17, 2025 11:50 PM

விழுப்புரம்:விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வளவனுார் பேரூர் தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வளவனுார் நடுமில் திடலில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசுகையில்;
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனை திட்டங்களை, பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களது தேவையை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணியை உடனே துவங்க வேண்டும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும், மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும் என கூறினார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், நகர செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா, நிர்வாகிகள் ராஜன், பழனி, சரபோஜி, லைட் ராஜேந்திரன், விஜயா பெரியசாமி, கந்தசாமி, ரஹ்மான் , துணை தலைவர் அசோக், பேரூராட்சி கவுன்சிலர்கள் சசிகலா கபிரியேல், மகாலட்சுமி செந்தில், வடிவேல், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, பார்த்திபன், பத்மாவதி திரிசங்கு மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.