/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வள்ளலார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
/
வள்ளலார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : அக் 05, 2025 11:04 PM

விழுப்புரம்: விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை சார்பில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
தருமச்சாலை நிறுவனர் ஜெயஅண்ணாமலை தலைமை தாங்கினார். பலராமன், பாரதி, சரவணபவன், வேல்முருகன், வழக்கறிஞர் சங்கர், குகன், சங்கர், வைரமணி முன்னிலை வகித்தனர். முன்னாள் நகரமன்ற சேர்மன் ஜனகராஜ் கலந்து கொண்டு ஆயிரம்பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நலத்திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நன்கொடையாளர்களுக்கு வள்ளல் நினைவு பரிசு மற்றும் நலத்திட்ட நாயகர் விருது வழங்கப்பட்டது.
அப்போது, செல்லமுத்து, சிவக்குமார், பாலாஜி, பிரகாஷ், பிரபாகரன் அட்சயா, தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.