/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக வாகனம் ஓட்டிய இருவர் கைது
/
அதிவேகமாக வாகனம் ஓட்டிய இருவர் கைது
ADDED : அக் 05, 2025 11:04 PM
விழுப்புரம்: அதிவேகமாக வாகனம் ஓட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து, பைக் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லுாரை சேர்ந்த விக்னேஷ், 25; என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக தனது பைக்கில் சென்றது தெரியவந்தது.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விக்னேைஷ கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, விராட்டிக்குப்பம் பாதை ரயில்வே கேட் அருகில் விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, கோயம்புத்துார் மாவட்டம், மாசாகாளிபாளையத்தை சேர்ந்த மகாமுனி மகன் கணேஷ், 19; என்பவர் டாடா ஏஸ் வாகனத்தில் அதிவேகமாக வந்தது தெரியவந்தது.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து கணேைஷ கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.