/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வல்லம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம்
/
வல்லம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம்
ADDED : பிப் 15, 2024 06:36 AM

செஞ்சி, : வல்லம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஆனந்ததாஸ், சிலம்புசெல்வன் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெறவும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று முதலீட்டார்களை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
21 ஊராட்சிகளில் தலா 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில ஒரு கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உலர் தானியக் களங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை தேர்வு செய்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய துணை சேர்மன் மலர்விழி அண்ணாதுரை, துணை பி.டி.ஓ.,கள் மணிகண்டன், செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயா, லட்சுமி, கம்சலா, பத்மநாபன், ஏழுமலை, கோமதி, பிரபாகரன், ஜெயலலிதா, கோபால், கலைவாணி, அமிர்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

