/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் சார் பதிவாளர் அலுவலகம் 'வெறிச்'
/
வானுார் சார் பதிவாளர் அலுவலகம் 'வெறிச்'
ADDED : மார் 19, 2024 10:49 PM
வானுார் : வானுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டமின்றி வெறிச்சோடியது.
மயிலம் ரோட்டில் வானுார் சார் பதிவாளர் அலுவலகம் புதுச்சேரி பகுதியையொட்டி இருப்பதால், தினமும் நுாற்றுக்கணக்கானோர் வீடு, மனை போன்றவைகளை பத்திரப்பதிவு செய்ய உரிமையாளர், இடைத்தரகர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் என பலரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் வரிசை கட்டி நிற்பர். இதனால் முகூர்த்த நாட்கள் மட்டுமன்றி மற்ற நாட்களிலும் பிசியாகவே காணப்படும்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து சென்றால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால், நேற்று முன்தினம் முதல் வானுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ஏதும் நடைபெறாமல் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

