/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
/
வானுார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : ஏப் 11, 2025 06:27 AM
விழுப்புரம்: பணியின் போது மெத்தனமாக இருந்த வானுார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யபட்டார்.
வானுார் அருகே திருவக்கரை பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில், நேற்று முன்தினம் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், டிரைவரான சேலம் மாவட்டம், சின்னபாபுபட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் காவேரி,24; டிராக்டரை பின்னால் எடுக்கும் போது கல்குவாரியில் டிராக்டருடன் விழுந்து இறந்தார்.
இந்த விபத்து குறித்து வானுார் போலீசார் வழக்குப் பதியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், விபத்து நடந்த இடத்திற்கு சம்பந்தபட்ட வானுார் இன்ஸ்பெக்டர் சிவராஜன் நேரில் செல்லவில்லை. விபத்து நடந்தது பற்றி அவர் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் மெத்தனமாகவும், அஜாக்ரதையாகவும் இருந்துள்ளார்.
இது குறித்து எஸ்.பி., அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராஜனை தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த தகவல் சரக டி.ஜ.ஜி., திஷாமித்தல் மற்றும் எஸ்.பி.,யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அறிவுரையின் பேரில், இன்ஸ்பெக்டர் சிவராஜனை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., சரவணன் நேற்று உத்தரவிட்டார்.

