/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஏ.ஓ., சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
வி.ஏ.ஓ., சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 07, 2024 05:16 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் லட்சுமணன், இணைச் செயலாளர் ஜெயராமன், வட்ட தலைவர் நந்தகுமார், செயலாளர் மணவாளன், பொருளாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழக அரசு மூலம் டிஜிட்டல் கிராப் சர்வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இத்திட்டத்திற்கு தொழில்நுட்ப உபகரணம் வழங்காமல், முழு பணியும் கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாகவே செயல்படுத்த இருப்பதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதேபோல், விக்கிரவாண்டி, வானுார் திண்டிவனம், திருவெண்ணெய்நல்லுார் உட்பட 8 தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.