ADDED : ஆக 19, 2025 11:44 PM

விழுப்புரம் : விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 2வது நாளாக நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பொருளாளர் பாரதிராஜா தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் ஜெயராமன், கவுரவ தலைவர் லோகேஷ், போராட்டக்குழு தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மணவாளன் வரவேற்றார். மாநில செயலாளர் புஷ்பகாந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
சட்டப்பிரிவு செயலாளர் லோகநாதன், நிர்வாகிகள் வெற்றிவேந்தன், மலையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தர்ணாவில் தவறான மாவட்ட முதுநிலை பட்டியலை ரத்து செய்து சரியான பட்டியல் வெளியிட வேண்டும். தவறான பட்டியலை பயன்படுத்தி இரவு நேரத்தில் நடத்திய கலந்தாய்வை ரத்து செய்து சரியான பட்டியலின்படி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.