/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வராக நதி மேம்பாலம் தடுப்பு சுவர் சேதம்; வாகன ஓட்டிகள் திக்..திக்.. பயணம்

ADDED : செப் 05, 2025 08:10 AM

விழுப்புரம்; மேல்பாதி தேசிய நெடுஞ்சாலையில் வராக நதி மேம்பாலம் தடுப்பு சுவர் உடைந்துள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இச்சாலையில் உள்ள மேல்பாதி வராக நதியின் மேம்பாலத்தில் தடுப்பு சுவர் உடைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மேல்பாதி வராக நதி மேம்பாலத்தில் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.