ADDED : மார் 08, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
மயிலம்: மயிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., - த.வெ.க., - பா.ம.க., - ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து 500 பேர் தி.மு.க.,வின் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கூட்டேரிப்பட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமை தலைமை தாங்கி பேசினார். மாவட்ட அவைத் தலைவர் சேகர், மயிலம் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் முன்னிலை வகித்தனர். மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.
தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், துரை, இளம்வழுதி, செழியன் அண்ணாதுரை, கவுன்சிலர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
