ADDED : அக் 14, 2024 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மழை வேண்டி, ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சிக்கூடல் சார்பில் வருண பூஜை நடந்தது.
அமைப்பு தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். பூஜையையொட்டி, ஆற்றில் கலசம் வைத்து கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம் மற்றும் வருண ேஹாமம், நடத்தி ேஹாமத்தில் பூஜிக்கப்பட்ட கலச நீரை மலட்டாற்றில் ஊற்றி வருண பகவானை வழிபட்டனர்.
பூஜையில் அரசூர், இருவேல்பட்டு, ஆனத்துார், சேமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பூஜையில் பங்கேற்றனர்.