/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.சி., நகர செயல்வீரர்கள் கூட்டம்
/
வி.சி., நகர செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : செப் 22, 2024 02:39 AM
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் வி.சி., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
உளுந்துார்பேட்டையில் வரும் அக்டோபர் 2ம் தேதி வி.சி., கட்சி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வி.சி.,கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்டம் சார்பில் மாநாட்டு பணிகள் குறித்து மயிலம் ஒன்றியம் மற்றும் திண்டிவனம் ஒருங்கிணைந்த நகர செயற்குழு கூட்டம் ஜக்காம்பேட்டையில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திலீபன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மகாவேந்தன், கார்மேகம் நகர செயலாளர் எழிலரசன் முன்னிலை வகித்தனர். கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் இளமாறன், செல்லதுரை, எழில்மாறன், பேராசிரியர் கல்பனா உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் இருந்து அதிகளவில் மாநாட்டில் பங்கேற்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனதா நன்றி கூறினார்.