ADDED : ஏப் 15, 2025 08:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம்; வக்ப் வாரிய சட்ட திருத்தத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி, வி.சி., சார்பில் கோட்டக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் திருவழகன் வரவேற்றார். விழுப்புரம் தென் கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., மாநில துணைச் பொதுச்செயலாளர் வன்னியரசு, தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் குணவழகன் ஆகியோர் பேசினர்.
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, ஜமாஅத் உலமா சபை தலைவர் சித்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
மகளிர் விடுதலை இயக்க நகர செயலாளர் நந்தினி நன்றி கூறினார்.

