/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு இடம் தனியாருக்கு விற்பனை அனந்தபுரத்தில் வி.சி.க., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 21, 2025 06:55 AM

செஞ்சி: அனந்தபுரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு விற்பதை கண்டித்து வி.சி.,கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனந்தபுரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை அரசியல் கட்சியனர் சிலர் கூட்டு சேர்ந்து தனியாருக்கு விற்பது, பட்டியலின மக்களுக்கு வீட்டு மனைகளை ஒதுக்காமல் தாமதிப்பதை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார். ஜெய்சங்கர் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராசாராமன், திருநாவுக்கரசு, குணபாலன், ராம்கி, பார்வேந்தன், ரகு, அரியான், நாகசாமி, வெற்றிவளவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தனஞ்செழியன் கண்டன உரையாற்றினார்.
ஆரணி லோக்சபா தொகுதி செயலாளர் நன்மாறன், அரசு, துரைவளவன், இனியவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.