/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணை மீன்பாசி குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
/
வீடூர் அணை மீன்பாசி குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
வீடூர் அணை மீன்பாசி குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
வீடூர் அணை மீன்பாசி குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : நவ 02, 2025 11:47 PM
விழுப்புரம்: வீடூர் அணையின் மீன்பாசி குத்தகையை இ-டெண்டர் மூலம் ஏலம் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள நீர்தேக்கமான வீடூர் அணையின் மீன்பாசி குத்தகையை 5 ஆண்டுகளுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்புந்த புள்ளிகள் இ-டெண்டர் மூலம் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் மூலம் ஏலம் விட ஆணையிடப்பட்டுள்ளது.
டெண்டர் விண்ணப்பங்கள் மற்றும் அதன் தொடர்பான விபரங்கள் www.tntenders.gov.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இது தொடர்பாக தெளிவுரைகள் தேவைபட்டால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலவலகம், நெ.62/56ஏ, தாட்கோ வளாகம், விழுப்புரம் 605602 என்ற முகவரியில் பணி நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

