ADDED : அக் 07, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு 10 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
விழுப்புரம் - நாகப்பட்டிணம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் காவல் நிலையம் எதிரே நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், பைக்கில் ெஹல்மெட் அணியாமல் வந்தது என 10 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் அதிவேகமாக சென்ற வாகன ஓட்டகளை நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.