/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் வாகன சோதனை: ரூ.1.16 கோடி வரி வசூல்
/
விழுப்புரத்தில் வாகன சோதனை: ரூ.1.16 கோடி வரி வசூல்
விழுப்புரத்தில் வாகன சோதனை: ரூ.1.16 கோடி வரி வசூல்
விழுப்புரத்தில் வாகன சோதனை: ரூ.1.16 கோடி வரி வசூல்
ADDED : ஜூன் 11, 2025 07:57 AM

விழுப்புரம்; விழுப்புரம் மண்டலத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், 1 கோடியே 16 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மண்டல துணை போக்குவரத்து ஆணையாளர் பாட்டப்பசாமி கூறியதாவது:
விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், கடந்த மே மாதம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, 1,352 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 221 ஆம்னி பஸ்கள், 361 சரக்கு வாகனங்கள், 101 டூரிஸ்ட் வேன் (மேக்ஸி கேப்) மற்றும் 117 ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் விதிமுறை மீறியது கண்டறியப்பட்டது.
மேலும், வாகன வரி நிலுவை மற்றும் அதிவேகம், ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது, மொபைல் போன் பேசியவாறு வாகனம் ஓட்டியது, கனரக வாகனத்தின் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்காதது ஆகியவற்றுக்கான இணக்க கட்டணமாக ஒரு கோடியே 16 லட்சத்து 59 ஆயிரத்து 551 வசூல் செய்யப்பட்டுள்ளது.