/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூன்றாம் நாளாக வாகனங்கள் அணிவகுப்பு
/
மூன்றாம் நாளாக வாகனங்கள் அணிவகுப்பு
ADDED : ஜன 14, 2025 06:39 AM

விக்கிரவாண்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி மூன்றாம் நாளாக நேற்றும் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து சென்றன.
தமிழக அரசு இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு நேற்று முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. அதனையொட்டி, சென்னையில் தங்கியுள்ள தென்மாவட்டத்தினர், பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லத் துவங்கினர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று நாட்களாக கார், பஸ், வேன் என வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் 8 லேன்கள் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுகின்றனர். இங்கு கடந்த 11ம் தேதி தென்மாவட்டங்களை நோக்கி 39 ஆயிரம் வாகனங்கள், 12ம் தேதி 35 ஆயிரம் வாகனங்களும் கடந்து சென்றன. மூன்றாம் நாளான நேற்று இரவு 7.00 மணி வரை தென்மாவட்டத்தை நோக்கி 20 ஆயிரம் வாகனங்கள் சென்றன.