/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் வாகனங்கள்
/
பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் வாகனங்கள்
ADDED : ஜூலை 08, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்ட அரசு தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வளாக நுழைவு வாயில் புறக்காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.
இங்கு டூ வீலர் ஸ்டாண்ட் போன்று, வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூர்களுக்கு செல்கின்றனர். இதை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்த வாகனங்கள் சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.