/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேகத்தடை இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
வேகத்தடை இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : செப் 29, 2025 01:15 AM

விழுப்புரம்:விழுப்புரம் அருகே பூத்தமேடு கூட்ரோட்டில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக் க வேண்டும்.
விழுப்புரத்தில் இருந்து செஞ்சி மற்றும் திருவண்ணாமலை செல்லும் சாலையில் பூத்தமேடு இ.பி., கூட்ரோடு உள்ளது.
இந்த கூட்ரோடு பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை மற்றும் செஞ்சி மார்க்கத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், விழுப்புரத்தில் இருந்து செல்லும் மார்க்கத்தில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால், விழுப்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து வந்து திரும்பும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். அதனால் பூத்தமேடு கூட்ரோடு விழுப்புரம் மார்க்கத்தில் வேகத்தடை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.