sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 போதை பொருள் கடத்தல் வழக்கு வாகனங்கள் 22, 23ம் தேதிகளில் ஏலம்

/

 போதை பொருள் கடத்தல் வழக்கு வாகனங்கள் 22, 23ம் தேதிகளில் ஏலம்

 போதை பொருள் கடத்தல் வழக்கு வாகனங்கள் 22, 23ம் தேதிகளில் ஏலம்

 போதை பொருள் கடத்தல் வழக்கு வாகனங்கள் 22, 23ம் தேதிகளில் ஏலம்


ADDED : டிச 10, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் வரும் 22, 23ம் தேதிகளில் மதுரை, திருச்சியில் பொது ஏலம் விடப்படுகிறது.

போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுதும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குகளில் பறிமுதலான 30 இரு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 4 லாரிகள், 6 படகுகள் உட்பட மொத்தம் 72 வாகனங்கள் உள்ளது.

இதில், 48 வாகனங்கள் வரும் 22ம் தேதி காலை 11:00 மணிக்கு மதுரையிலும், மீதமுள்ள 24 வாகனங்கள் 23ம் காலை 11:00 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்கு விரும்புவோர், கடந்த 7ம் தேதி முதல் வரும் 21ம் தேதி வரை, திருச்சி மொபைல் 9498158708, கன்னியாகுமரி 9444580750, தேனி 9788924045, திண்டுக்கல் 7904065255, சிவகங்கை 8300063466, மதுரை 9585511010, நாகப்பட்டினம் 7904548453, கோயம்பத்துார் 9498173282, சேலம் 7200008025, விழுப்புரம் 9894378470 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் நேரடியாக சென்று வாகனங்களை பார்வையிடலாம்.

ஏலத்தில் பங்கேற்போர் நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் உடனே ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்தி விட்டு இரு நாட்களுக்குள் இதற்குண்டான ஜி.எஸ்.டி., தொகையை அவர்களின் ஜி.எஸ்.டி., கணக்கில் செலுத்தி விட்டு, அதன் நகலை சம்பந்தப்பட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.

இதையடுத்து வாகனத்தின் விற்பனை ஆவணம் வழங்கப்படும். ஏலத்தில் பங்கேற்போர் தவறாமல் அவர்களின் ஆதார் நகலை ஏலத்திற்கு முன்பாக சமர்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us