/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயி தீக்குளிக்க முயற்சி :கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
/
விவசாயி தீக்குளிக்க முயற்சி :கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
விவசாயி தீக்குளிக்க முயற்சி :கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
விவசாயி தீக்குளிக்க முயற்சி :கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
ADDED : டிச 09, 2025 06:03 AM

விழுப்புரம்: செஞ்சி அருகே பட்டா மாற்றத்தில் நடந்த முறைகேட்டைகண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 65; விவசாயி. இவர், நேற்று காலை 10:30 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு பட்டா மாற்றம் பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்தார்.
திடீரென கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அதில், அவர் தனதுக்கு சொந்தமான நிலத்திலிருந்து 60 சென்ட் இடத்தை, உறவினர் அவரது பெயரில் முறைகேடாக பட்டா மாற்றம் செய்து கொண்டார். இதனையறிந்து செஞ்சி தாலுகா அலுவலகத்திலும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தீக்குளிக்க முயன்றதாக சேகர் தெரிவித்தார்.
உடன், போலீசார் அவரை எச்சரித்து கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

