/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொடர் விடுமுறையால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுப்பு : எஸ்.பி., கண்காணிப்பு எஸ்.பி., கண்காணிப்பு

ADDED : ஆக 16, 2025 02:12 AM

விக்கிரவாண்டி:தொடர் விடுமுறை காரணமாக விக்கிர வாண்டி டோல்கேட்டை கடந்து தென்மாவட்டங் களுக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று அரசு விடுமுறையைத் தொடர்ந்து சனிக் கிழமை கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
விடுமுறையை கொண்டாட சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் அரசு பஸ், ஆம்னி பஸ், கார், வேன், பைக் என பல்வேறு வாகனங்களில் புறப்பட்டனர்.
இதனால் நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு மேல் சாலையில் தென் மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் அணிவகுக்கத் துவங்கின. அதனையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதல் எஸ்.பி., சரவணன், டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் டோல்கேட்டில் போக்குவரத்து குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிற்காமல் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் கூடுதலாக 2 லேன்களை திறந்து 9 லேன்கள் வழியாக வாகனங்கள் அனைத்தும் நெரிசல் இன்றி அனுப்பி வைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் 14ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை 40 ஆயிரம் வாகனங்களும், நள்ளிரவுக்கு மேல் நேற்று பிற்பகல் 2:00 மணி வரை 31 ஆயிரம் வாகனங்கள் டோல்கேட்டை கடந்தன.
இது தினமும் செல்லும் சராசரியான போக்குவரத்தான 24 ஆயிரத்தை விட கூடுதலாக 16 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன.
நேற்று அதிகாலையில் இருந்து வாகனங்கள் சாலையில் அணிவகுத்ததால் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனை பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி காரணமாக சர்வீஸ் சாலையில் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன.