/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திலும் டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுப்பு
/
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திலும் டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திலும் டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திலும் டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுப்பு
ADDED : டிச 26, 2024 07:04 AM

விக்கிரவாண்டி,: கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திலும் தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வு முடிந்து, 24ம் தேதி முதல் ஜன 1ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுறை இருந்தது.
அதையொட்டி, சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் பலர் பஸ், கார், வேன், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்ல துவங்கினர். இதனால் கடந்த நான்கு நாட்களகாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகரித்தது.
நேற்று 5வது நாளாக, கிறிதுஸ்மஸ் பண்டிகை தினத்திலும் சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் பயணித்தன. நேற்று இரவு 7.00 மணி வரை 33 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தன.
வாகனங்கள் 8 லேன்கள் வழியாக அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலின்றி கடந்தன.
எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகன போக்குவரத்து தொடர்ச்சியாக காணப்பட்டது.
தினமும் சராசரியாக 24 ஆயிரத்தை விட நேற்று கூடுதலாக 14 ஆயிரம் வாகனங்கள் சென்றன.