/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய வாகனங்கள் நெடுஞ்சாலையில் அணிவகுப்பு
/
தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய வாகனங்கள் நெடுஞ்சாலையில் அணிவகுப்பு
தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய வாகனங்கள் நெடுஞ்சாலையில் அணிவகுப்பு
தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய வாகனங்கள் நெடுஞ்சாலையில் அணிவகுப்பு
ADDED : நவ 04, 2024 03:47 AM

விக்கிரவாண்டி: தென்மாவட்டங்களுக்கு தீபாவளி விடுமுறைக்கு சென்று சென்னை திரும்பிய வாகனங்கள், விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் அணிவகுத்து சென்றன.
தென் மாவட்டங்களில் இருந்து தலை நகர் சென்னையில் பல்வேறு பணிகளில் உள்ளவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த மாதம் 29ம் தேதி முதல் சென்றனர்.
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு 92 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல் கேட்டில் 9 லேன்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்பு இன்றி கடந்து சென்றன.
பண்டிகைக்கு சென்ற வாகனங்கள் கடந்த 1ம் தேதி முதலே சென்னைக்கு திரும்பத் துவங்கின. கடந்த 2 நாட்களாக சராசரியான போக்குவரத்து இருந்தது. நேற்று வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையில் வாகனங்கள் சென்னைக்கு திரும்பியதால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து சென்றன.
விழுப்புரம் எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், முத்துராஜ் உள்ளிட்ட 200 பேர் நேற்று காலை முதலே போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 1ம் தேதி 22 ஆயிரம் வாகனங்களும், 2ம் தேதி 33 ஆயிரம் வாகனங்களும், நேற்று பிற்பகல் 3:30 மணி வரை 28 ஆயிரம் வாகனங்கள் சென்னைக்கு திரும்பின. இரவு முதல் அதிகாலை வரை டோல் கேட்டை வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல 8 லேன்களும் திறக்கப்பட்டிருந்தன.